தூத்துக்குடி மாவட்ட மழலையர் துவக்கப்பள்ளிகள் சங்கப் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.தூத்துக்குடி பெல் ஹோட்டல் கலையரங்கில் மாவட்ட மழலையர் துவக்கப்பள்ளிகள் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்தில் நடப்புக் கல்வியாண்டில் கற்பித்தல் சிறப்பாக நடத்துதல், மற்றும் பள்ளிகளில் உள்ள பிரச்னைகள், புதுப்பித்தல் அனுமதி பெறுவது, 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்களுக்கு நகரமைப்புத் திட்ட அனுமதி பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது தூத்துக்குடி ஜான்சன் செல்வராஜ், ஆழ்வார்திருநகரி மாளவியா வேலு முள்ளக்காடு சாமுவேல், புதிய முத்தூர் கணேசன் மற்றும் பால் விக்டர் ஆகியோர் தேர்தல் ஆணையாளர்களாகச் செயல்பட்டனர். வல்லநாடு பாரதி சங்கரலிங்கம் தலைவராகவும் தூத்துக்குடி செயின்ட் மேத்யூ ஜோசப் செயலராகவும் ஜாய் பெல் பிராங்க் பொருளாளராகவும் ஏகமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் சேர் வைக்காரன் மடம் ஜீவா இணைத் தலைவராகவும் தூத்துக்குடி டாக்டர் ராஜசேகர் துணைத் தலைவராகவும் சாந்தி அச்சுதன் இணைச் செயலராகவும், லியோவில் பர்ட் துணைச் செயலராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளைத் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்னாள் பேராசிரியர் சுயம்புலிங்கம் பத விப் பிரமாணம் செய்து வைத்தார்


