சமூக செயல்பாட்டு இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் மதர் சமூக சேவை நிறுவன அலுவலகத்தில் நடந்தது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரு மாநிலங்கள் அளவில் ஜாதி, மதம், இனம் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டு சமூக நீதி மாநில விடுதலை பாலியல் சமத்துவம் மற்றும் உயிரோட்டமுள்ள புவி சூழலுக்கு உகந்த வளர்ச்சி போக்கில் மக்களை மையப்படுத்தி செயல்படும் தன்னார்வ சமூக சேவை அமைப்புகளின் கூட்டமைப்பான சமூக செயல்பாட்டு இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள மதர் சமூக சேவை நிறுவன அலுவலகத்தில் வைத்து நடந்தது.
இதில் சமூக செயல்பாட்டு இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் கென்னடி கடந்த 3 ஆண்டுகள் செயல்பட்டு வந்தார். இதனால் மீண்டும் போட்டியின்றி அனைவராலும் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுள்ளார்.
மாவட்ட இணை அமைப்பாளராக லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி, மாவட்ட நிதி அமைப்பாளராக அபிராமி டிரஸ்ட் இயக்குனர் சண்முகவேல், மாநில பொதுக்குழு உறுப்பினராக இர்ஓ தொண்டு நிறுவன இயக்குனர் சந்திரன், பிரபஞ்ச அன்பு டிரஸ்ட் இயக்குனர் ஜாக்சன், டீரிஸ் சொசைட்டி இயக்குனர் ராஜன், மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக பாரத் சேவா டிரஸ்ட் இயக்குனர் கோட்டாளமுத்து, ஸ்ரீமண் நாராயணன் நினைவு ட்ரஸ்ட் இயக்குனர் ராணி, சிகரம் டிரஸ்ட் இயக்குனர் முருகன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட சமூக செயல்பாட்டு இயக்கத்தின் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
இத்தேர்தலை சமூக செயல்பாட்டு இயக்கத்தின் மாநில அமைப்பாளரும் தொண்டு நிறுவன இயக்குனமான சந்திரன் நடத்தினார். மேலும் இதில் பனை பாதுகாப்பு நிறுவன இயக்குனர் சுதாகர், தீபம் பவுண்டேஷன் இயக்குனர் சங்கர் கணேஷ் வானவில் தொண்டு நிறுவன இயக்குனர் தர்மர், ரீடு தொண்டு நிறுவன இயக்குனர் முருகேசன் உட்பட பல்வேறு தொண்டு நிறுவன இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.


