1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளி திறப்பு உற்சாகத்துடன் வருகை தந்த வல்லநாடு பாரதி பள்ளி மாணவ-மாணவிகள் வல்லநாடு, நவ.1 ஒன்றரை வருடங்களுக்கும் பின் தமிழகம் முழுவதும் 1 முதல் 8 வகுப்புகள் திறக்கப்பட்டன.
உற்சாகத்துடன் தங்களின் புத்தகப்பைகள் சுமந்து புன்முறுவலுடன் பள்ளிக்கு ஆர்வமுடன் வருகை தந்தனர். வல்லநாடு பாரதி மழலையர் துவக்கப்பள்ளி மாணவர்களும் உற்சாகத்துடன் வருகை தந்தனர்.ஆசிரியைகள் அன்புடன் உபசரித்து சானி டை சர்மற்றும் கொரோனா விழிப்புணர்வு வழிகாட்டி நெறிமுறை களுடன் வரவேற்றனர். சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் உட்கார வைக்கப்பட்டனர். ஆசிரியைகள் தம்பி ராட்டி, கலா செல்வி, இராம செல்வம் ஆகியோர் நற்பண்புகதைகள், ஆடல் பாடல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மூலம் கற்பித்து மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினர்.நெல்லை பரணி டி.வி.சண்முகவேல், தினமலர் நிருபர் வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் மாணவ மாணவி களுக்கு இனிப்புகள் வழங்கினர்.பள்ளி நிறுவனர் பாரதி சங்கரலிங்கம் தலைமை ஆசிரியை ரத்னம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர்


