மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனை மரம் விதை நடும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதன் தொடர்ச்சியாகத் திருச்செந்தூர் முதல் குலசேகரபட்டினம் கடற்கரை பகுதியில் பனை மர விதை நடும் பணியை நடைபெற்றது, கதர் கிராம தொழில்கள் ஆணையத்தின் உதவி இயக்குனர் அன்புச்செழியன் தொடங்கி வைத்தார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ்ஜே கென்னடி செய்திருந்தார்


