அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உலக களரி அடிமுறை கூட்டமைப்பு, களரியை மீட்டெடுத்து உலக நாடுகளில் சுமார் 21 நாடுகளுக்கு களரி விளையாட்டை கொண்டு சென்றுள்ளனர். இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அடிமுறை கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு களரி விளையாட்டு போட்டி நடத்தியது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திய களரி அடிமுறை கூட்டமைப்பை துவக்கி கோவையில் வி¬ளாயட்டு போட்டி நடத்தினார்கள். தற்போது இந்திய களரி விளையாட்டு வீரர்களை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சியாக கோவை கே.பி.ஆர் கலை மற்றும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் உலக களரி அடிமுறை கூட்டமைப்பு மற்றும் இந்தியன் களரி கூட்டமைப்பு இணைந்து நடத்திய ஆயுதம் 2024 நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய களரி அடிமுறை பாகம் 1 ஆங்கில நூல், களரி அடிமுறை பாகம் 2 மற்றும் 3 ஆகிய தமிழ் நூல் உள்பட மூன்று நூல்கள் வெளியிடப்பட்டது. இந்த நூலை பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிமுகபடுத்தினார். தொடர்ந்து பேராசான்கள் 20 பேருக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும் போது தமிழக முதல்வர் அவர்களும், விளையாட்டு துறை அமைச்சர் அவர்களும் கன்னியாகுமரி மாவட்டத்தில் களரி, சிலம்பம் போன்ற கலைகளை உயிர்பிக்கும் வகையில் ஆராய்ச்சி நிலையம் அமைக்க சட்டமன்றத்தில் இசைந்துள்ளனர். இந்த வேளையில் உலக களரி அடிமுறை கூட்டமைப்பு சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து களரி கலையை மீட்டெடுக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்கும் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு உலக களரி அடிமுறை கூட்டமைப்பு தலைவர் ரமேஷ் ரத்ன குமார் தலைமை வகித்தார். முதன்மை அலுவலர் செந்தில் ராஜ்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் கே.பி.ஆர் கல்லூரி தளாளர் கே.பி.ஆர். கே.பி.ராமசாமி , என். ஆர் தனபாலன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். கூட்டமைப்பு இணை நிறுவனர் முதல்வர் டாக்டர் கீதா, இந்திய களரி கூட்டமைப்பு தலைவர் வனிதா, முனியசாமி ஆசான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் துவக்க விழா கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது. ரமேஷ் ரத்னகுமார் தலைமையில் வருமான வரித்துறை ஆணையாளர் நந்தகுமார் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் அமெரிக்காவில் இருந்து களரி அடிமுறை கூட்டமைப்பு இணை இயக்குனர் பாரத் ராமமூர்த்தி இணையம் வழியாக பேசினார். நிகழ்ச்சியில் மருத்துவர் பரமேஸ்வரன், பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் முருகவேல், தொழிலதிபர் பழனிசாமி, கல்லூரி முதல்வர் முனைவர் கீதா, இணை இயக்குனர் லதா, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, உலக களரி அடிமுறை கூட்டமைப்பு முதன்மை அலுவலர் செந்தில் ராஜ்குமார், முனியசாமி ஆசான், களரி அடிமுறை தலைமை தொடர்பு அதிகாரி அனுராதா களரி அடிமுறை கூட்டமைப்பினரை அறிமுகம் செய்தார். இந்திய களரி அடிமுறை கூட்டமைப்பு தலைவர் வனிதா நன்றி கூறினார்
முதல் நாள் மதியம் நடந்த கருத்தரங்கில் மும்பை இந்திய தொழில் நுட்ப நிறுவனர் முனைவர் சித்த மருத்துவர் ராஜேந்திரன், கோழிகோடு மனோஜ் குருக்கள் ஆகியோர் களரி அடிமுறை குறித்து பேசினர். இரவு நடந்த களரி குழு விளையாட்டு நடந்தது. இதில் கே.பி.ஆர் கல்வி குழும சேர்மன் கே.பி. ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஹரிகர சுதன், சித்ரா, ஹரி கிருஷ்ணன், தாரா ஜெய்சங்கர், ஷெர்லி, பேச்சியம்மாள், சரவணன், ஹரி, முனைவர் குமரேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து களரி அடிமுறை குழுவினரின் கூட்டு விளையாட்டு போட்டி நடந்தது.


