தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனம் மணிவிழாவில் செந்தமிழ் வேந்தர் விருது வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வேளாக்குறிச்சி ஆதீனம் 18 வது குருமகா சன்னிதானத்திற்கு மணி விழா மூன்று நாட்களாக நடந்து வந்தது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து அதீனங்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர் . இறுதி நாளில் தமிழகத்தில் உள்ள முக்கிய ஆளுமைகளுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவிற்கு செந்தமிழ் வேந்தர் விருதும் 5 ஆயிரம் ரூபாய் பொற்கிழியும் வழங்கப்பட்டது. வேளாக்குறிச்சி ஆதீனம் 18 வது குருமகா சந்நிதானம் விருதை வழங்கினார். தாமிரபரணியை பற்றி எழுதிய வகைக்கும், ஆதிச்சநல்லூர் அறிக்கை வெளி வர மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற வகைக்கும், தொடர்ந்து களரி, சித்தர்கள், மலைப்பயணங்கள், ஜமீன்தார்கள் என எழுதி வரும் வகைக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.