முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தலைத் தாமிரபரணி நூல் விமர்சனம்,தினமணி நாளிதழில். நன்றி ஆசிரியர் குழுவிற்கு. அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு.
தலைத் தாமிரபரணி – முத்தாலங்குறிச்சி காமராசு:பக்.1040;ரூ.1000;காவ்யா சென்னை-24; 044-23726882.
தென்காசி,தூத்துக்குடியை உள்ளடக்கி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை புரான விளக்கங்கள், வரலாற்றுத் தரவுகளுடன் மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளது இந்நூல்.
தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியின் உற்பத்தி குறித்து மிக விரிவாக பதிவு செய்திருப்பதோடு மட்டுமல்லாது அது கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலான அணைகள்,சிற்றாறுகள், கால்வாய்கள்,கோயில்கள், மூலிகைகள் உள்ளிட்டதகவல்களையும்உள்ளடக்கியுள்ளது.
முகமது நபியின் வரலாற்றைக் கூறும் சீ றாப் புராணம் எழுதிய உ மறுப்புலவருக்கு எட்டையபுரத்தில் தர்கா உள்ளது. இந்த தர்காவை கட்டியவர் யாதவ குலத்தை சேர்த்த பிச்சையா கோனார். மறவர், யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உமறுப்புலவரின் பெயரை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுகின்றனர்.
ஆங்கிலேயரிடம் தபேல் தாராகப் பணியாற்றிய சுலோச்சனா முதலியார், லண்டனில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு கிடைத்த பரிசுத் தொகையை வைத்து திருநெல்வேலியையும் கொக்கிர குனத்தையும் இணைக்கும் ஆற்றுப்பாலத்தை கட்டினார்.
பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகேயுள்ள கிளாரிந்தா சர்ச்சுக்குள் வீரவாஞ்சிநாதன் கட்டுக்கொன்ற ஆஷ் துரையின் க ல்லறை உள் ளது. அவருடைய மனைவி, மகளின் கல்லறையும் அதே இடத்தில்தான் உள்ளன. இவர்களின் நினைவு நாளில் இங்கிலாந்திலிருந்து அவரது உறவினர்கள் நெல்லைக்கு வந்து அஞ்சலிசெலுத்துகின்றனர்.
கிறிஸ்தவ பாதிரியார்கள் பாளையங்கோட் டைக்கு வந்த பிறகு நெல்லையப்பர் கோயிலை மையப்படுத்தி இந்துக்களும், மேலப்பாளை யத்தை சுற்றி இஸ்லாமியர்களும், ஊசி கோபு ரத்தை மையமாக வைத்து கிறிஸ்தவர்களும் வாழ ஆரம்பித்தனர்.
நெல்லை மாவட்டத்தைகுறுக்கு நெடுக்காக ஆழ மாக ஊடுருவியும். அகலமாக விரித்தும் மிகச்சிறப் பாக பதிவு செய்திருக்கும் வரலாற்றுப் பொக்கிஷம்.