நவத்திருப்பதி கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் நவத்திருப்பதி ஸ்தலங்களும் ஒன்று. இந்த கோவில்களில் வருடம் தோறும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அதே போல் இந்தாண்டு ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவத்திருப்பதி கோவில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் காரணமாக அனைவரும் முகக்கவசம் அணிந்து கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


