பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 101வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 1,100 பனை விதைகளை நடும் நெடும் பணி திட்டத்தின் தொடக்க விழா ஆரோக்கியநாதபுரம் குளத்தில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை–திருச்செந்தூர் சாலையில், கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பீர்க்கன்குளம், பற்பக்குளம், தூதுகுழி பெரியகுளம், மேலும் ஆறாம்பண்ணை முதல் கொங்கராயகுறிச்சி வரையிலான தாமிரபரணி ஆற்றுப் படுகைப் பகுதிகளில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் முதல் கட்டப் பணி ஆரோக்கியநாதபுரத்தில் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், கோயமுத்தூர் ஸ்ரீ சத்ய சாய் பிரேம விருட்சம் அறக்கட்டளையின் அறங்காவலர் பத்ரி நாராயணன், தாமிரபரணி முள்செடி அகற்றும் திட்டத்தின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தமிழக அரசின் ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்தின் பணி ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெலிக்ஸ் பிரான்சி, சிஸ்டர் நிவேதா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மதன், ரீச் பவுண்டேஷன் அறங்காவலர் மாசானமுத்து, இயக்குநர் விக்னேஷ், ஜே.சி.எல். திருநெல்வேலி சங்கத்தின் தலைவர் சாந்தி, செயலாளர் பிரியா, ஆரோக்கியநாதபுரம் ஆசிரியர் மோகன், முன்னாள் படைவீரர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரீச் பவுண்டேஷன் இயக்குநர் மாசானமுத்து சிறப்பாக செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் என்னை அழைத்து, சந்தனமாலை அணிவித்து கௌரவித்த எனது ஆசிரியர் சங்கரன் அய்யா அவர்களின் மகனும், சிறந்த சமூகச் சேவகருமான மாசானமுத்து அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பல புதிய நண்பர்களையும் சமூக ஆர்வலர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
– முத்தாலங்குறிச்சி காமராசு


