திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற விழாவில் 8 நூல்கள் வெளியிடப்பட்டன.
எழுத்தாளர் இளசை அருணாவின் 80வது முத்து விழாவை முன்னிட்டு வண்ணார்பேட்டை விக்னேஷ் மகாலில் 8 நூல்கள் வெளியிட பட்டது. விழாவிற்கு தமிழகடல் நெல்லைகண்ணன் தலைமை தாங்கினார். என்.எஸ்.ஏ சிவகுமார் வரவேற்றார். முருத்வர்கள் பிரேமசந்திரன், ராமானுஜம்,பிச்சம்மாள் ஆகியோர் பாடல்கள் பாடினர்.
இளசை அருணா எழுதிய நாட்டுத்திலகமும் பாட்டுத்திலகமும், ஒரு முதில் மலர் மொட்டாகிறது, இதுவரையில் நான் என்ற சிற்றேடு ஆகியவை வெளியிடப்பட்டது. இளமுருகுவின் கூடையில விழுந்த பூக்கல், சி .பூங்குழலியின் பண்பின்மலர்கள், எட்டயபுரம் காஜாமைதீனின் உமறுப் புலவர், எழில் ஏ. ரத்னத்தின் பத்மநாபபுரம் அரண்மனை ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டது. பி.ஜவகர் எழுதிய என் ஆசான், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நூல் வெளியிட தமிழ்கடல் நெல்லை கண்ணன் நூலை பெற்றுக்கொண்டார். விழாவில் எழுத்தாளர்கள் வண்ணதாசன், ஜேக்கப், செ. திவான், கிருஷி, இளசை மணியன், பாப்பாக்குடி செல்வமணி, நாறும்பூநாதர் மனோன்மணியம் சுந்தரனால் பல்கலைகழக மேனாள் துறை தலைவர் அழகேசன், நெல்லை வானொலி அறிவிப்பாளர் கரைச்சுற்றுபுதூர் கவிபாண்டியன், பத்தமடை கந்தசாமி, கடம்போடுவாழ்வு நல்ல பெருமாள், கிருஷ்ணாபுரம் புன்னைவனம், சிற்றம்பலம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இளசை அருணா, சங்கரவிநாயகம் ஆகியோர் நன்றி கூறினார்.