ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் கலைச்செல்வன் டாக்டர் பெர்ரிஷியா தம்பதியினர். இவர் மகன் டாக்டர் அமர் பில்லி. இவர் மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். அங்கு சமுக சேவை நிறுவனத்தினை சேர்ந்த பிரான்ஸ் தூல்லூஸ் பகுதியை சேர்ந்த பெட்ரிக் பெரிக் & லாரன்ஸ் தம்பதினர் மகள் பெட்ரிக் மெத்லடிக் என்பரை கண்டார். அவர் அந்த ஆஸ்பத்திரிக்கு ஏழைகுழந்தைகளை மருத்துவத்திற்காக கூட்டி வருவார். இருவரும் சேவை மனத்துடன் ஒரே இடத்தில் வேலை பார்த்தனர். பெட்ரிக் மெத்லடிக் தமிழ் பண்பாட்டை மிகவும் நேசித்தார். டாக்டர் அமர் பில்லிக்கு பெட்ரிக் மெத்லடிக் சேவை, நேசிப்பை ஏற்பட்டது. இருவரும் நேசிப்பு ஒரு காலகட்டத்தில் காதலாக மலர்ந்தது.
இருவரும் தமிழ் பண்பாடு படி மனமுடிக்க ஆசைப்பட்டனர். அதுவும் தங்கள் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் நடத்த திட்டமிட்டனர். இதன் படி இருபக்கமும் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதற்காக பிரான்ஸ் தூல்லூஸ் பகுதியில் உள்ள மணமகளின் உறவினர்கள் ஆழ்வார்திருநகரி வந்து சேர்ந்தனர். கடந்த 6 ந்தேதி மாலை ஆழ்வார்திருநகரி சி.எஸ். ஐ ஆலயத்தில் வைத்து இருவருக்கும் திருமணம் நடந்தது. யானையில் மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். மணமகளின் உறவினர்கள் அனைவரும் பட்டு சேலையில் தமிழர் பண்பாடு உடன் ஆலயத்துக்கு வந்தனர்.
ஆலயத்தியில் தூத்துக்குடி திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமையில் செய்துங்கநல்லூர் சேகரகுரு ஜேசுபாதம் உள்பட பலர் குருக்கள் கலந்துகொண்டு திருமணத்தினை நடத்தி வைத்தனர். மணமக்களை உள்ளூர் பொதுமக்கள் உள்பட உறவினர்கள் வாழ்த்தினர்.
இதுகுறித்து மணமகன் டாக்டர் அமர்பில்லி கூறும்போது, பெட்ரிக் மெத்லடிக் சேவை மனமிக்கவர். தமிழர்களை நேசிப்பவர். தமிழை கற்றுகொள்ள ஆர்வமாக பயணிப்பவர். என்னுடைய வாழ்க்கை துணையாக வந்த அவர் என்னை நேசிப்பது போலவே தமிழ்பண்பாட்டையும் நேசித்து உள்ளார். அவருடைய உறவினர்களும் நமது பண்பாட்டை மதித்து பட்டாடை அணிந்து திருமணத்துக்கு வந்தது எனக்கு சந்தோஷத்தினை ஏற்படுத்தியுள்ளது. என்றார்.
ஆழ்வார்திருநகரியில் நடந்த இந்த திருமணம் மிக கலகலபாய் நடந்து முடிந்தது.