அனவரதநல்லூரில் குடிதண்ணீர் தட்டுபாடு என போஸ்டர் ஓட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கருங்குளம் ஒன்றியம் வசவப்புரம் பஞ்சாயத்துக்கு உள்பட கிராமம் அனவரதநல்லூர். இந்த கிராமத்து வழியாக கருங்குளம் கூட்டு குடிதண்ணீர் திட்டம் செல்கிறது. அதற்கான நீர் ஏற்றும் நிலையம் இவ்வூரில் உள்ளது. ஆனால் இவ்வூருக்கு முறையாக தண்ணீர் கிடைப்பதில்லை. இதுகுறித்து பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில் 2016&17ல் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் 7 அரை லட்சம் செலவில் தனி போர் ஆழிகுடி தாமிரபரணி ஆற்றில் போடப்பட்டடு பைப் லைன் பதிபு வேலை முடிந்தும் கூட முறையாக தண்ணீர் வரவில்லை. இதற்கிடையில் கருங்குளம் ஒன்றிய யூனியன் பொதுநதியில் ஐம்பு போட்டு 5 லட்சம் டெண்டர் விட்டனர். ஆனால் இரண்டு வருடங்கள் கடந்தும் அதன் வேலை முடிந்த பாடில்லை. எனவே அனரதநல்லூர் கிராமத்துக்கு தண்ணீர் வழங்க கோரி ஊர் பொதுமக்கள் சார்பில் போஸ்ட அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இதற்காக ஊர் மக்கள் சார்பில் கருங்குளம் ஒன்றிய ஆணையாளரிடம் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் சிவராஜன் சம்பவ இடத்துக்கு சென்று திட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். விரைவில் அனவரதநல்லூர் மக்களுக்கு குடிதண்ணீர் வழங்க அனைத்து நடவடிக்கை எடுக்கபடும் என அவர் கூறினார்.


