வல்லநாட்டில் பொதுமக்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வல்லநாடு வி.டி.வி.டி கல்யாண மண்டபத்தில் நடந்த இந்த முகாமில இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இருதய நோய், தோல் சம்பந்தமான அலர்ஜி, படை, தேமல் போன்ற வியாதிகள், மூட்டுவலி,கை, கால் உளைச்சல், புற்றுநோய் ஆரம்ப நிலை கண்டுபிடிப்பு, வாய், மார்பகம், கர்ப்பபை பரிசோதனை, சரக்கரை நோய் பாதிப்பு, கண் வழி திரை பரிசோதனை , கண்பார்வை பரிசோதனை, குழந்தை இன்மை , மார்பகப் புற்றுநோய் பெண்கள் சம்பந்தமான நோய்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். டாக்டர் மருதினி தெய்வநாயகம் முன்னிலை வகித்தார். டாக்டர் பொன்னம்பலம், பாலமுருகன், பாலசுப்பிரமணியன், மாய கிருஷ்ணன், நிர்மலா, கல்பனா, கலா மாலதி, பிரசாத் ஆகியோர் நோயாளிகளுக்கு இலவச பரிசோதனை செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு வி.டி.வி.டி டிரஸ்ட், திருநெல்வேலி சுதர்சன் மருத்துவமனை, திருநெல்வேலி அரவிந்த கண் மருத்துவமனை, மதுரை குரு மருத்துமனை, திருநெல்வேலி செட் டிரஸ்ட், சித்த மருத்துவர்கள் இணைந்து நடத்தினர்.


