குலசேகரநத்தம் கிராமத்தில் நடமாடும் ரேஷன் கடை திட்ட துவக்க விழா நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட குலசேகரநத்தம் கிராமத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமை வகித்து அம்மா நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், பராக்கிரம பாண்டி பஞ்சாயத்து தலைவர் சரவணன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகையாபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் காசிராஜன் ஊர் தலைவர் மாரியப்பன், இளைஞரணி செயலாளர் சிங்கப்பன், கவுன்சிலர் ராம லட்சுமி நாகராஜன், பஞ்சாயத்து உதவியாளர் கோத்தாலமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


