முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. பொன்னன்குறிச்சியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பேச்சு.
பொன்னன்குறிச்சியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
குறைந்த எண்ணிக்கையில் ரேஷன் கார்டுகள் உள்ள அம்மா கிராமப்புற மக்களின் நலன் கருதி நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது.
இத்திட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் ரேஷன் கார்டு உள்ள கிராம மக்கள் சுமார் 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள அருகில் உள்ள கிராமத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு பதிலாக குறிப்பிட்ட நாட்களில் குறைந்த எண்ணிக்கையில் ரேஷன் கார்டுகள் உள்ள மக்கள் வாழும் கிராமத்திற்கு வந்து ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னன்குறிச்சி கிராமத்தில் நடமாடும் ரேஷன் கடை திட்ட துவக்க விழா நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்பி சண்முகநாதன் எம்எல்ஏ தலைமை தாங்கி அம்மா நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் அதிமுகவையும் தமிழகத்தையும் சிறப்பாக வழி நடத்திக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறார்.
குறிப்பாக கிராமப்புற மக்கள் நலன் கருதி துவக்கி வைக்கப் பட்டுள்ள நடமாடும் ரேஷன் கடை திட்டத்தின் மூலம் தாய்மார்கள் 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரம் வரை அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்கும் நிலையை மாற்றி அவர்கள் வசிக்கும் அந்த கிராமத்திலேயே குறிப்பிட்ட நாட்களில் ரேஷன் பொருட்களை பெற்று விடும் வகையில் இத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
என்றார் அவர்.


