ஆறாம்பண்ணையில் போலியோ சொட்டுமருந்து முகாம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை அங்கன்வாடி மையத்தில் வைத்து போலியோ சொட்டுமருந்து முகாம் நடந்தது. இந்த நிகழ்ச்சியை ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் இப்ராஹிம், கிராம செவிலியர் சதாசிவ தம்மால், உதவியாளர் ஜான்சிராணி, அங்கன்வாடி பணியாளர் கோமதி, உதவியாளர் ரஹ்மத் மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர். இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.


