செய்துங்கநல்லூர் அருகே வேலை செய்து கொண்டிருந்த எலக்டிரிசன் தவறி விழுந்து இறந்தார்.
செய்துங்கநல்லூர் அருகே கொள்ளீர்குளத்தினை சேர்ந்தவர் பிச்சைகண்ணு. இவரது மகன் மைக்கேல்ராஜ்(வயது45). இவர் முத்தாலங்குறிச்சி பகுதியில் எலக்டிரிசனாக வேலை பார்த்து வருகிறார். மற்ற வேளைகளில் வயரிங் ஒப்பந்த வேலைகளை எடுத்து செய்து வருவார். கடந்த 6ந் «தி முத்தாலங்குறிச்சி காமராஜர் தெருவில் உள்ள சேர்மதுரை என்பவர் வீட்டில் ஒப்பந்த வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார். தலையில் பலத்த காயத்துடன் அவரை கருங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்தவர்கள் மேல்சிகிச்சைக்காக பாளை அரசு மருததுவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 7 ந்தேதி இறந்து விட்டார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் அருள்ரோஸ்லின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த மைக்கேல்ராஜ் பேச்சியம்மாள் என்ற மனைவியும், மதன், பிரியதர்சினி என்ற மகளும் உள்ளனர். பேச்சியம்மாள் முத்தாலங்குறிச்சி செங்கல்சூளையில் கூலி தொழிலுக்கு சென்று வருகிறார். மைக்கேல்ராஜ் இறப்பு அப்பகுதியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
====


