தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த 2 மாத காலமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இந்நிலையில் இன்று மதியத்திற்கு மேல் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் சுமார் 3.30 மணி அளவில் செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளான தூதுகுழி, நாட்டார்குளம், அய்யனார்குளம்பட்டி பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த சூறைக்காற்று மற்றும் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் திருநெல்வேலி&திருச்செந்தூர் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.
இதனால் கடந்த 2 மாத காலமாக மக்களை வாட்டி வதைத்து வந்த வெப்பம் தனிந்து சற்று குளுமையான சூழ்நிலை நிலவியது.