செய்துங்கநல்லூர் மூப்பனார் மேலத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் இசக்கி(53). இவர் கூலி த்தொழிலாளி. இவருக்கு சொந்தமான வீட்டில் இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது பெய்துவரும் பருவ மழையில் இவரது வீட்டு சுவர் பாதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் இந்த வழியாக சென்ற சாக்கடை நீர் செல்வதற்கு வழியில்லாமல் இவ்விடத்தில் தேங்கி நின்றது. இதனால் நேற்று முன்தினம் இவரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. நல்லவேளை வீட்டில் இருந்தவர்கள் வெளியேசென்று இருந்தனர். இல்லையென்றால் உயிர் பலி ஏற்பட்டிருக்கும். இடிந்து சுவரினை பார்வையிட்டு வீடு இன்றி கஷ்டப்படும் தனக்கு அரசுஇலவச வீடு கட்டி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.