செய்துங்கநல்லூரில் மார்கழி பஜனை திருவிழா நடந்தது. இதையட்டி சோமசுந்தர விநாயகர் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. அதன் பின் விநாயகருககு சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. அதன் பின் மார்கழி பஜனை குழுவினர் வீதி உலா வந்தனர். சோமசுந்தர விநாயகர் கோயிலில் இருந்து கிளம்பிய பஜனை குழுவினர் பிள்ளையார்கோயில் தெரு, மூப்பனார் தெரு, மெயின்ரோடு உள்பட பல வீதிகள் வழியாக பஜனை பாடி வந்தனர். செய்துங்நல்லூரில் சேனை தலைவர்கள் சங்க நிர்வாக கமிட்டி உறுப்பினர் ராமசாமி, கணேசன், சுப்பிரமணியன், திருவரங்கம், உள்பட பலர் பஜனை குழுவினருககு பாராட்டு தெரிவித்தனர். மூப்பனார் மேலத்தெருவில் வந்த போது திமுக பிரமுகர்கள் மு. பட்டன், மு.ப. முத்துசாமி ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர் கணேச பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.மார்கழி பஜனை குழு ஏற்பாடுகளை சோமசுந்தரவிநாயகர் கோயில் சேனை தலைவர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.