வல்லநாடு அருகே உள்ள பக்கப்பட்டி வடக்கு தெரு மாடன் மகன் செல்வராஜ் (45). இவருக்குசொந்தமான வீடு தொடர்ந்து பெய்து வந்த பருவமழை காரணமாக இடிந்து விழுந்தது. இதுகுறித்து செல்வராஜ் கிராம நிர்வாக அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளார். அரசு உரிய நடவடிக்கை எடுத்து செல்வராஜ் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இலவச வீடு கட்டி தர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.