எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 2019 ஆண்டு சிறந்த சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.
நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து வெளிவரும் பல்சுவை சமுதாய இலக்கிய மாத இதழ், உங்கள் நண்பர். பல்தரப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து வரும் இந்த இதழில் இந்த ஆண்டு சிறந்தவர்களுக்கான விருதான சேவா ரத்னா விருது வழங்கும் நிகழ்வு மேலப்பாளையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 2019 ஆண்டுக்கான சிறந்த சேவா ரத்னா விருதை உங்கள் நண்பர் ஆசிரியர் நெல்லை ஜாபர் வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய்பரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.