தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. இவர் நெல்லை , தூத்துக்குடி மாவட்டம் சம்பந்தாக இதுவரை 50 நூல்கள் படைத்துள்ளார். இந்த நூல்கள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள முன்னணி பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய நவின தாமிரபரணி மகாத்மியம் என்னும் நூல் தாமிரபரணி மகா புஷ்கரத்தினை முன்னிட்டு வேளாக்குறிச்சி ஆதினம் மூலமாக வெளியிடப்பட்டது. இந்த நூல் உலக நதிகள் வரலாற்றில் முதல் முதலாக க்யூ ஆர் கோர்டு மூலமாக வீடியோ மூலம் எழுத்தாளர் வரலாறு கூறுவது போல அமைக்கப்பட்டிருந்தது. இந்த நூலுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்து வருகிறது. முத்தாலங்குறிச்சி காமராசு ஆதிச்சநல்லூர் குறித்து வழக்கு தொடர்ந்து தமிழ் தென்மையான மொழி என நிருபித்த வகைக்கும், நவின தாமிரபரணி மகாத்மியம் எழுதிய வகைக்கும் நீயூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி மூலமாக இந்த ஆண்டு தமிழ் ரத்னா சிறப்பு விருது தமிழக முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனி சாமி மூலமாக வழங்கப்பட்டது.
தாமிரபரணி மகா புஷ்கர நிறைவு விழாவை முன்னிட்டு இதே நூலுக்காக இலக்கிய கலைசெம்மல் விருதை புஷ்கர கமிட்டியினர் வழங்கினர். இந்த விருது காஞ்சி பெரியவர் முன்னிலையில், வேளாக்குறிச்சி ஆதினம் தலைமையில் மக்கள் செய்தி தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜி வழங்கினார். செங்கோல் மட ஆதினம், துலாகுறிச்சி மட ஆதினம், காசி மட இளவரசு, திருநேல்வேலி ஸ்ரீமத் பரசமயகோளரி நாத ஆதினம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதே நிகழ்ச்சியில் புலவர் மகாதேவன், சாய் ராம். ஸ்ரீவில்லிபுத்தூரான், வெங்கட், கணபதிசுப்பிரமணியன் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தாமிரபரணி ஆரத்தி எடுக்கப்பட்டது.