கடந்த மாதம் (23.09.2026) அன்று தூத்துக்குடியில் வைத்து ‘கிராம உதயம்’ சார்பில் எனக்கு ‘அப்துல் கலாம் விருது’ வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அடுத்த மாதமே நெல்லையில் வைத்துத் தென் தமிழர் கட்சி சார்பில் எனக்குப் ‘பசும்பொன் முத்துராமலிங்க தேவர் விருது’ வழங்கப்பட்டது.
அக்டோபர் 18, 2026 அன்று நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மண்டபத்தில் வைத்து இந்த விருது வழங்கப்பட்டது. தேசியத் தலைவர் ஐயா முத்துராமலிங்க தேவர் பெயரிலான விருது எனக்குக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த விருதை எனக்குத் தரக் காரணமாக இருந்த கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி ஐயா அவர்களுக்கும், மாவட்டத் தலைவர் வாகை முருகன் ஐயா அவர்களுக்கும், மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் கால்வாய் சிவா பரணி தமிழன் அவர்களுக்கும், நெல்லை மாவட்டப் பொறுப்பாளர் ஆணைப் புரம் பாண்டி அய்யா அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த விருதை எனக்கு வழங்கிய தொழிலதிபர் வேலங்குளம் கண்ணன் அய்யா அவர்களுக்கும், உடன் இருந்த கீழநத்தம் வேல்பாண்டியன் அய்யா அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடன் மூக்கையா தேவர் விருது பெற்ற விமல் ராகவனுக்கும், குருசாமி பிள்ளை விருது பெற்ற குருதிக் கொடையாளர் தாதன்குளம் நம்பிபாண்டியனுக்கும், பெருமாள் குடும்பன் விருது பெற்ற மகேஸ்வரனுக்கும், ஏ.ஆர். பெருமாள் தேவர் விருது பெற்ற சடையாண்டி அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவில் நான் விருது பெறுகிறேன் எனத் அறிந்தவுடன் வாழ்த்த வந்த எனது ஊரைச் சேர்ந்த அய்யப்ப குருசாமி குருநாதன் அய்யா அவர்களுக்கும், மேலப்பாளையம் விமல் வேலு நைனார் அய்யா அவர்களுக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
முத்தாலங்குறிச்சி காமராசு


