தமிழர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் வகையில், நியூஸ் 7 தமிழ் சார்பில் தமிழ் ரத்னா விருது” வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் எழுத்தாளரும், ஆதிச்சநல்லூர் நாகரீகத்தினை வெளி கொண்டு வர மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துதமிழரின் தொன்மையை உலகறிய செய்தவரும், எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி இந்த நிகழ்ச்சி துவங்கியது.
நியூஸ் 7 தமிழ் நடத்திய தமிழ் ரத்னா நிகழ்ச்சியில் பங்கேற்று விருதுகளை தமிழக முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும் சென்னை உயர்நீதி மன்ற நீதி பதிகள் கிருபாகரன், சுரேஷ்குமார் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், மா.பாண்டியராஜன் உள்ளிட்டோருக்கு, நியூஸ் 7 தமிழ் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து, விருது வழங்கும் விழாவில், கட்டைக்கூத்து ராஜகோபாஆல் அவர்களுக்கு “கலை ரத்னா விருது”ம், புகழ்பெற்ற தமிழறிஞர் டாக்டர்.தொ.பரமசிவம் அவர்கள் சர்பாக அவரது மகன் கண்ணன் அவர்களுக்கும் “இலக்கிய ரத்னா விருது”ம், பிரளயன் அவர்களுக்கு “நாடக ரத்னா விருது”ம் முதலமைச்சரால் வழங்கப்பட்டது.
மேலும், “கேஸ்ட்லெஸ் கலக்டிவ்” குழுவினருக்கு “இசை ரத்னா விருதும்”, சதீஷ் சிவலிங்கம் அவர்களுக்கு “விளையாட்டு ரத்னா விருதும்”, ரவீந்திர குமார் அவர்களுக்கும் சேவை ரத்னா விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, “ஆசிரியர் ரத்னா விருது” பகவான் அவர்களுகம், “தொழில் ரத்னா விருது” சிபி.செல்வம் அவர்களுக்கும், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்களுக்கு “மகளிர் ரத்னா விருதும்” முதல்வர் வழங்கி கௌரவித்தார்.
“யுவ ரத்னா விருது” விழியன் அவர்களுக்கும், “சக்தி ரத்னா விருது” நளீனா பிரசீதா அவர்களுக்கும் வழங்கப்பட்டது. “சிறப்பு விருது” அறிவிக்கப்பட்ட மறைந்த வசனகர்த்தா கிரேஸி மோகன் அவர்களுக்கான விருதை அவரது சகோதரர் மாது பாலாஜி பெற்றுக்கொண்டார்.
“மற்றொரு சிறப்பு விருது”, புகழ்மிக்க எழுத்தாளரும்,வணக்கம் மும்பை சிறப்பு செய்தியாளரும், எழுத்தாளமான, முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களும், “தமிழ் ரத்னா விருது”க்கு தேர்வு செய்யப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு, அவரது சார்பாக அவரது நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்கள்.
விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு பல்வேறு அமைப்புகள் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.