தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக பாளையங்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது.
கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரோட்டரி சங்கம் சார்பில் இந்த நவீன தொடுதிரை வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் மதன்ராஜா, ரூ.1 லட்சம் மதிப்பிலான ஏஐ தொடுதிரையைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியை லதா தலைமை வகித்தார்.
ரோட்டரி மாவட்ட உடனடி முன்னாள், ஆளுநர், தினேஷ் பாபு , வருங்கால ஆளுநர் மயில் பாலசுப்பிரமணியன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் பேசினர்.
பாளையங்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் அமிர்தலிங்கம் வரவேற்றார். இந் நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் மாரியப்பன், நிகழ்ச்சியின் புரவலர். கனகராஜ், கருங்குளம் ஊராட்சி செயலாளர் சங்கர பாண்டியன். ரோட்டரி மாவட்ட இயக்குனர் பாபு, ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் பாலமுரளி , மேத்யூ, சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் நீதி குருசாமி, ஜெயிசன், செயலாளர் ரவி பாஸ்கர், முன்னாள் செயலாளர்கள் ஆண்ட்ரூ ஆபிரகாம், விஜயகுமார், ராகவ் சுந்தர், சரவண சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி. தமிழக வெற்றிக் கழகத்தின் கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர்,
முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சியினை பொருளாளர் மாசானமுத்து தொகுத்து வழங்கினார். பள்ளியின் கணித ஆசிரியை அழகம்மாள் மாசானமுத்து நன்றி கூறினார்.


