
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி உறுப்புக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் படைப்பாளர் அரங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் அருங்காட்சியகத் துறை இணைந்து நிகழத்தும் தேசிய அளவிலான தொல்லியல் கல்வெட்டில் பயிலரங்கம் மற்றும் தொல் பொருள் அருங்காட்சியகம் துவக்க விழா நடந்தது.
பயிலரங்க துவக்க விழாவில் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்துறைத்தலைவர் முனியசாமி வரவேற்றார். கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி தலைமையுரையாற்றினார். மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஸ்டீபன் துவக்க விழாப்பேரூரை நிகழத்தினார்.
முதல் நிகழ்வில் தொல்லியல் காட்டும் தமிழரின் நாகரீகமும் பண்பாடும் என்ற தலைப்பில் திருநெல்வேலி அரசு அரங்காட்சியகம் மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி ஆய்வுரை வழங்கினார். வணிகவியல் துறை துறைத்தலைவர் முனைவர் சா.லீலா நெறியாளராக இருந்தார். இரண்டாம் அமர்வில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மண்மூடிய மகத்தான உண்மைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆய்வுரை வழங்கினார். தமிழ் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சு. அசோக்குமார் நெறியாளராக இருந்தார்.மேலும் பல நிகழ்வுகள் நடந்தது. முனைவர் விவேகலதா, ஆங்கிலத்துறை கணபதி ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.