
திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டம் , வல்லநாடு காசேநோய் பிரிவின் 7 ஆம் ஆண்டு துவக்கவிழா வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி தலைமை வகித்தார். வட்டார சுகாதர மேற்பார்வையாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்றார். காசநோயாளிகளுக்கும், மருந்து அளிப்பவர்களுக்கும் மத்திய மாநில அரசுகள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ஸ்ரீவைகுண்டத்தான், உள்பட பலர் கலந்துகொண்டனர்.சுகாதார ஆய்வாளர் ஷாஹிர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.