ஆறாம்பண்ணை முகைதீன் பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.
ஆறாம்பண்ணை முகைதீன் பள்ளிவாசலில் புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. ஜமாத் செயலாளர் மொன்னா முகம்மது தலைமை வகித்தார் உறுப்பினர்கள் எஸ்.எம். அப்துல்கனி, ஏ.அப்துல் கனி, கே. இமாம் அலி, அபுல்ஹசன், அப்துல் ரகுமான் உள்பட முன்னிலை வகித்தனர். தலைவர் முகமது உதுமான் நோன்பு கஞ்சியை வழங்கினார். பள்ளிவாசல் இமாம் அப்துல்காதர் சிறப்பு தொழுகை நடத்தினார். இதில் அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கத்துடன் நோன்பு கஞ்சி வாங்கி சென்றனர்.