
முறப்பநாட்டில் மழை வெள்ளத்தால் முறிந்த விழுந்த மின்கம்பங்கள் சீரமைப்பு.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாகத் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு தொடர்ந்து 3 தினங்களாக நீடித்தது. இதனால் தாமிரபரணி ஆற்று நீர் பல்வேறு இடங்களில் வயல்வெளிகளுக்குள் புகுந்தது. இதனால் விவசாயிகளும் பெரியளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வல்ல நாடு அருகே முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் முறப்பநாடு கைலாசநாதர் கோவிலிலிருந்து தாமிரபரணி ஆற்றுக்குச் செல்லும் வழியிலிருந்த 4 மின்கம்பங்கள் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட தொடர் வெள்ளப்பெருக்கால் முறிந்து விழுந்தது. முறிந்து விழுந்த மின்கம்பங்கள் தற்போது ஒரு மாத காலமாகியும் அதே இடத்தில் சீரமைக்கப்படாமல் கிடந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் தற்போது இந்த 8 மின்கம்பங்களும் மின்வாரியத்துறை சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. நடுரோட்டில் கிடந்த மின்கம்பங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.