செய்துங்கநல்லூரில் விபத்து உண்டாகும் சாலை சீர் செய்யப்படுமா என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்துங்கநல்லூரில் நெல்லை & திருச்செந்தூர் மெயின்ரோடு உள்ளது. இந்த சாலை தற்போது விரிவு படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக திருநெல்வேலி மாவட்ட மகராஜநகர் 3 வதுமெயின் ரோட்டில் நிலஎடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அலுவலர் செய்துங்கநல்லூர் உள்பட சாலை ஓரங்களில் உள்ள இடங்களை கையகப்படுத்தி வருகிறார். இதற்கான நோட்டீஸ் முறப்பநாடு சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில் செய்துங்கநல்லூர் நுழையும் இடத்தில் மோசமான வளைவு சாலை ஒன்றுள்ளது. இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும். இதில் சுமார் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். சுமார் 20 க்கு மேற்பட்டவர்கள் காயமுற்றனர். ஆனால் இந்த ஆபத்தான வளைவை புதிதாக போட, புதிதாக உள்ள திட்டத்தில் வரைபடம் இல்லை. பழைய வளைவை மாற்றாமல் அப்படியே புதிய சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இது பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்துங்கநல்லூரை சேர்ந்த பொன்னுசாமி கூறும் போது , தற்போது நெல்லை திருச்செந்தூர் சாலையை அகல படுத்த நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதில் முதல்கட்டமாக திட்டம் தயார்செய்து முடித்து உள்ளனர். இந்த திட்டத்தில் மிக அதிகமான விபத்து ஏற்பட்ட மோசமான செய்துங்கநல்லூர் கருவேலங்குளம் குளத்து கரையில் உள்ள வளைவை சீர் செய்ய வில்லை. இந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படும். இதனால் இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர் . பலர் விபத்தில் காயமடைந்துள்ளனர். இந்த இடத்தினை சீர் செய்ய வாய்ப்பு உள்ளது. விட்டிலாபுரம் விலக்கு பஸ் நிலையத்தில் இருந்து இந்த வளைவை குளத்தில் உள்ள இடத்தினை கையகப்படுத்தி நேராக்கினால் விபத்து ஏற்பாடாது. எனவே உடனடியாக வளைவை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை சீரமைக்கும் முன்பே அதிவேகமாக வரும் வாகனங்கள் இந்த இடத்தில் விபத்துக்குள்ளாகும். சாலை விரிவானால் இதைவிட வாகனங்கள் வேகமாக வரநேரிடும். அப்போது விபத்து மேலும் அதிகமாகும் .எனவே நடவடிக்கை எடுக்கவேண்டும். என்று அவர் கூறினார்.
இதுகுறித்து செய்துங்கநல்லூளர்தென்னஞ்சோலையை சேர்ந்த வீரமணி தலைமையில் சமூக ஆர்வலர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.