செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் மற்றும் முற்றுகை போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சண்முகராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மாரியப்பன் விளக்கவுரையாற்றினார். ஒன்றிய தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். நூறு நாள் வேலைக்கு வரும் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் உள்பட 13 கோரிக்கையை முன்வைத்து ஒன்றிய ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதன்முன் பெண்கள் அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மணி, கொம்பையா, கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜ் குமார், ஒன்றிய தலைவர் பெருமாள் ஒன்றியக்குழு வைரமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.