பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் இறை யோகா உயிர்வளர்க் கலை மூலமாக இறை புத்தாண்டு கொண்டாட்டம், இறை யோகா குடும்ப விழா நடந்தது.
இறையோகா வைத்திய கலை தலைவர் டோமினிக் சாவியோ இறைவணக்கம் பாடினார். சகாய சாந்தி குருவணக்கம் கூறினார். இறையோகா ஆலோசனைக்குழு இசக்கி பாண்டியன் வரவேற்றார். ரேணுகாதேவி, பிரேமாவதி, சந்தனமாரியம்மாள், வசந்தி ,சுதா ஆகியோர் குத்துவிளக்கேற்றினார். இறையோகா நிறுவனர் குமரன்ஜி பிராத்தனை யாகத்தினை துவக்கி வைத்தார். புலவர் ராஜாராம் திருக்குறளும் மெய்யுணர்வும் என்ற தலைப்பிலும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தாமிரபரணியும் தொல்குடி மக்களும் என்ற தலைப்பிலும் பேசினர். இளையோகா ஜோதிட கலை தலைவர் முருகராஜன் நன்றி கூறினார். ஜெகதீஷ், கண்ணன், சாஹேமீரான், சிவகீர்த்தி உள்பட பலர்கலந்து கொண்டனர்.