ஸ்ரீவைகுண்டம் கணியன் காலனியில் ஓலை பெட்டி முடையும் பயிற்சி நிறைவு விழா நடந்தது.
தற்போது தமிழகம் எங்கும் அரசு பிளாஸ்டிக் பொருளை ஒழித்துள்ளது. அதற்கு மாற்று வழியாக பழைய காலங்களை போலவே ஓலைப்பெட்டியை பயன்படுத்த பல்வேறு நிறுவனங்கள் முயற்சி செய்து வருகிறது. அதுபோலவே ஸ்ரீவைகுண்டம் இரட்டை திருப்பதி சீனிவாசன் சேவை அறக்கட்டளை சார்பில் ஓலை பொருள்கள் செய்யும் நான்கு நாள் பயிற்சி முகாம் ஸ்ரீவைகுண்டம் கணியான் காலனியில் நடந்தது. அதில் பெட்டி, கிலுக்கு, வண்ணப்பெட்டி, மிட்டாய் பெட்டி, மிளகு பெட்டி போன்ற பல்வேறு பெட்டிகளை செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை பயிற்சியாளர் டாக்டர் பால் பாண்டி நடத்தினார். முதல் கட்டமாக செந்தாமரை மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த 15 பேருக்கு பயிற்சி நடந்தது. இதன் நிறைவு விழாவிற்கு அற்கட்டளை கள இயக்குனர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் மக்கள் நல சங்க தலைவர் பிச்சை கண்ணு, செயலாளர் கந்தசாமி, பொருளாளர் கருத்தபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமுதாய வளர்ச்சி அலுவலர் பரமசிவன் வரவேற்றார். கிராம சேவகர் செல்வி, மகளிர் குழுவை சேர்ந்த காஞ்சனா, கலா, பவுலின் உள்பட பலர் கலந்துகொண்டனர். கிராம சேவகர் சந்திரியா நன்றி கூறினார்.


