கருங்குளத்தில் சி.சி.டி.வி. கேமரா திறப்பு விழா நடந்தது.
இந்த விழாவில் சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி துரைசிங்கம் தலைமை தாங்கினார். தலைமை காவலர் சுப்பையா வரவேற்றார். ஆட்டோ தொழில் சங்க தலைவர் மாரியப்பன், உலகநாதன், அபுர் தாகீர் முகம்மது அலி, புளியங்குளம் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் ரெகு ராஜன் சி.சி.டி.வி கமரா வை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் விபத்து நடைபெறாமல் இருக்க கருங்குளத்தில் புறக்காவல் நிலையம் அமைத்தும், அடிக்கடி விபத்து ஏற்படும் கருங்குளம் சுடலை கோயில் பாலம், ஆதிச்சநல்லூர் வடிகால் பாலத்தில் வாகனங்கள் நின்று செல்ல சிவப்பு விளக்கு அமைத்த ஸ்ரீ வைகுண்டம் டி.எஸ்.பி சுரேஷ்குமார் க்கு ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் கருங்குளம் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் கருங்குளம் பஸ் நிலையத்தில் விபத்து ஏற்பாடாமல் இருக்க நெல்லை திருச்செந்தூர் ரோட்டிலும் கருங்குளம் & மூலைக்கரைப்பட்டி ரோட்டிலும், கருங்குளம் கொங்கராய குறிச்சி ரோட்டிலும் தனித்தனியாக பேருந்து நிறுத்தம் அமைக்கவும், மெயின்ரோட்டில் இருபுறமும் பேரிகார்டு அமைக்கவும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை பரிசீலித்த இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் ஆவண செய்வதாக வாக்களித்தார்.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கல்லத்தியான், ஆறுமுகம், மணி, உள்பட பலர் கலந்துகொண்டனர். முதல் நிலை காவலர் இசக்கி முத்து நன்றி கூறினார்.