செய்துங்கநல்லூரில் வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு நடந்தது. செய்துங்கநல்லூரில் வர்த்தக சங்கம் ஆரம்பிக்கப்ட்டு ஓராண்டு முடிந்தது. இதையொட்டி ஆண்டு விழா நடந்தது. தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். செயலாளர் பிச்சை பூபாலராயர் முன்னிலை வகித்தார். பொருளாளர் பால்சாமி வரவேற்றார். சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு சங்க உறுப்பினர்கள் ஒரு நாள் குற்றாலம் சுற்றுபயணம் மேற்கொண்டனர். இதையொட்டி ஒரு நாள் செய்துங்கநல்லூரில் கடையடைப்பு நடந்தது. இதனால் 80 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.


