செய்துங்கநல்லூர் அருகே கால்வாய் கிராமத்தில் போலிசார் வீடுகளை சூறையாடியதாக பொதுமக்கள் புகார் செய்த காரணத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.
கால்வாய் அம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து(50). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகன் சோமசுந்தரம் (27). கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் பிரம்மசக்தி(25). செய்துங்கநல்லூரில் உள்ளடெய்லர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் வள்ளிக்கு வருகிற மாதம் உள்ளூரில் திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்துள்ளனர். இதற்காக அழைப்பிதழ் அச்சிட்டு, அதை உறவினர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம் போலிசாருக்கு கொலை வழக்கு ஒன்றில் கிடைத்த தகவல் பெயரில் சோமசுந்தரத்தையும் அதே ஊரை சேர்ந்த சிவனு மகன் மாயாண்டி என்பவரை தேடி வந்துள்ளனர். வந்த இடத்தில் இருவரையும் காணவில்லை. மேலும் அவர்களை பற்றி தகவல் தரவில்லை என போலிசார் இரண்டு வீடுகளையும் அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுடலைமுத்து ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சகாயஜோஸ் இடம் மனு ஒன்றுகொடுத்தார். அந்த மனுவில்லை போலிசார் எனது வீட்டை உடைத்து சூறையாடியதோடு 15 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் பணத்தினை அபகரித்து சென்று விட்டனர் என புகார் செய்தார். மேலும் கால்வாய் கிராம மக்கள் இந்த சம்பவத்தினை கண்டித்து ஆதிச்சநல்லூர் மெயின்ரோட்டில் சாலை மறியல் செய்ய போவதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாய ஜோஸ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் ஆகியோர் கால்வாய் கிராமத்தில் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் நேற்று முன்தினம் இரவு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு நேற்று ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், துணைதாசில்தார் பேச்சிமுத்து, செய்துங்கநல்லூர் ஆர்.ஐ. முத்துலெட்சுமி ஆகியோர் விசாணை நடத்தினர்.
போலிசார் வீடு புகுந்து சூறையாடியது குறித்து விசாரணை நடந்து வருகிறது. நகை மற்றும் பணத்தினை போலிசார் எடுத்து சென்றார்களா எனவும் விசாரணை நடந்து வருகிறது.
போலிசார் மீது பொதுமக்கள் நகையை அவகரித்து சென்றதாக புகார் செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


