009. மண்ணின் புகழைப் போற்றும் கஸ்ஸாலி அண்ணன்
செய்துங்கநல்லூர் மண்ணுக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை அண்ணன் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி. எதையும் மிகவும் பிரமாண்டமாகச் செய்பவர். குறிப்பாக அண்ணனை பா.ம.க மாநில துணைத் தலைவராக நான் சந்தித்தேன். அதன் பிறகு அவரை மிகவும் நேசிக்கக் காரணம் அவர் செய்த உதவிகள். குறிப்பாக மண்ணின் மைந்தர்களுக்கு உதவி புரிவது. குறிப்பாக சென்னைக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு உதவுவது. கொங்கராயகுறிச்சி ஆற்றுப் பாலம் வர உண்ணாவிரதம்போரட்டம் நடத்தியது. செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்துக்கு மத்திய இணை அமைச்சர் வேலு அவர்களை¬ கூட்டி வந்து ஏற்பாடு செய்தது என இந்த மண்ணணுககு அவர் ஆற்றிப் பணி அதிகம். அதன் பிறகு அண்ணன் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். பல்வேறு தொழில்களை மிகச்சிறப்பாகச் செய்யும் அவருக்கு சில நெருடல் ஏற்பட்டால் கூட உடன் இருப்பவர்கள் மனதைக் காயப்படுத்த மாட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் உதய நிதி ஸ்டாலின் அவர்களை எதிர்த்து நின்று தோல்வியுற்றாலும் நட்சத்திர வேட்பாளர் அந்தஸ்து பெற்றவர். எங்கள் மண்ணுக்குப் பல விதத்தில் பெருமை சேர்த்த அண்ணன், என் எழுத்து வாழ்விலும் ஒளி ஏற்றியவர். நான் பிரபலம் ஆகும் முன்னே எனது புத்தகம் மூன்றை தலா 100 வாங்கி , செய்துங்கநல்லூர் வெளியீட்டுவிழாவை மிகப்பிரமாண்டாக வைத்து என்னை எழுத்து உலகில் அறிமுகப்படுத்தியவர். என் வாழ்வில் ஒரு மைல் கல்லாக அமைந்தவர் அண்ணன். அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


