
சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் 2021 -22 ஆ ம் ஆண்டுக்கான இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. சேர விரும்புவோா் 10, 11, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஆதாா் அட்டை, ஜாதிச் சாறு, மாா்பளவுள்ள புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து கொண்டு வர வேண்டும்.
முதுகலைப் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிப்போா் தங்களது இளங்கலை மதிப்பெண் பட்டியல், பட்டயச் சான்று ஆகியவற்றை ஸ்கேன் செய்து கொண்டு வர வேண்டும். கல்விக் கட்டணத்தை இணையதள வழியாக செலுத்த வேண்டும். கூடுதல் தகவல் பெற விரும்புவோா் கணிதவியல் துறைப் பேராசிரியா் பிரேசிலை”. என அறிவிக்கப்பட்டுள்ளது.