
008. நெல்லை நூல்களைத் தேடிப்பிடித்து பதிப்பிக்கும் காவ்யா சண்முக சுந்தரம்
ஊர் மண் மீது பாசம் வைத்திருப்பவர்கள் பலர். அதிலும் அதீத பாசம் வைத்து இருப்பவர்கள் ஒரு சிலரே. அந்த ஒரு சிலரில் காவ்யா பதிப்பக உரிமையாளர் பேராசிரியர் சண்முகசுந்தரம் ஒருவர். நெல்லையின் நூல்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் நெல்லை எழுத்தாளர்களை அறிமுகபடுத்தஆவலாய் உள்ளவர். அதோடு மட்டுமல்லாமல் அவர் பதிப்பித்த 1000 புத்தங்களில் பெரும்பாலான புத்தகம் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தினை பற்றியே இருக்கும். சாதாரண மண்ணாக இருந்த எனக்கு உருகொடுத்து என்னை எழுத்தாளராய் பரிணாம வளர்ச்சி அடையச் செய்து இன்று எனக்கு எழுத்தாளர் அந்தஸ்து பெற்றுத் தந்தவரும் அய்யாதான். அவரது தந்தை காக்கரை சுடலைமுத்துதேவரய்யா நினைவு நாளை முன்னிட்டு தொடர்ந்து நெல்லை மண்ணில் வைத்து நூல் வெளியிடுவார். அதில் நிச்சயம் என்னுடைய நூல்கள் இடம்பெறும். என்னை அவரது குடும்பத்தில் ஒருவராக அறிமுகம் செய்து வளர்த்து வருகிறார் அய்யா. இதுபோல் பல்வேறு எழுத்தாளர்கள் இன்று தமிழகத்தில் காவ்யா பதிப்பக நிழலில் வாழ்ந்து வருகிறார்கள். எனக்குத் தலைத்தாமிரபரணி , தென்பாண்டிச்சீமையிலே பாகம் 1 , தென்பாண்டிச்சீமையிலே பாகம் 2, தென்னாட்டு ஜமீன்தார்கள் ஆகிய 1000 பக்கம் நூலை வெளியிட்டுள்ளார்கள்.அதோடு மட்டுமல்லாமல் நான் எழுதிய 53 நூல்களில் பெரும்பாலான நூல்கள் காவ்யா பதிப்பகம் வெளியிட்டதே. நன்றி அய்யா. என் எழுத்துக்கு அஸ்திபாரம் நீங்கள்தான் என் வாழ்வில் மறக்கவே முடியாது.. அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு