ஆறாம்பண்ணையில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வனச்சரகம் மூலமாக 6 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். தாமிரபரணி முள் செடி அகற்றும் பணி ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னிலை வகித்தார். வல்லநாடு வனச்சரகர் சரவணன் பனை விதை நடும் பணியைத் தொடங்கி வைத்தார். இதில் 50 தன்ஆர்வலர்கள் பனை விதைகளை ஆறாம்பண்ணை ஆற்றங்கரையில் விதைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆறாம்பண்ணை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர், கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் ஆனந்த், முருகசெல்வி, செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


