வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து பெரிய பைப்லைன் மூலம் தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
வல்லநாடு அருகே உள்ள இராசாங்குளம் விவசாய நிலம் வழியாக பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பைப் லைன் குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகி விவசாய நிலங்களுக்குள் சென்று விவசாய நிலங்களை நாசம் செய்கிறது. இதை உடனடியாக சீர் செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


