தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து கிராமத்தில் உள்ள கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்த பின்னர், கோவில் பூட்டப்பட்டது. நேற்று காலையில் கோவில் நிர்வாகத்தினர் நடை திறக்க வந்தபோது, சாமி சிலையின் கழுத்தில் கிடந்த 6¾ பவுன் தங்க செயின், கையில் கிடந்த வெள்ளிக் காப்பு ஆகியவை திருடுபோயிருந்தது.
கோவிலின் ஓட்டை பிரித்து மர்ம நபர்கள் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி முத்துசெல்வன் என்பவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கோவிலில் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


