ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், கலியாவூர் கிராமத்திற்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா எம்எல்ஏ ,2019 -20 ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கலியாவூர் கிராமத்திற்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை( பஸ் ஸ்டாண்ட்) ஒன்றினை வழங்கியிருந்தார். அந்தப் பணியினை இன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். மேற்கொண்டு அம்பேத்கர் நகர், எம்ஜிஆர் நகர், அம்மன்புரம், காலாங்கரை, வல்லநாடு, வட வல்லநாடு, கீழ வளநாடு போன்ற கிராமங்களில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்யும் கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார், 100 நாள் ஆகியும் சம்பளமே தரவில்லை என்றும் சரியாக வேலை தர மறுக்கிறார்கள் என்றும் புகார் கூறினர், இதற்கு சண்முக எம்எல்ஏ உடன் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இதுகுறித்து துரித நடவடிக்கை எடுத்து மக்களுக்கு எளிதாக சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டுக்கொண்டார், பின்பு வல்லநாடு தம்பிராட்டி அம்மன் கோயில் கலை அரங்கத்திற்கு கழிப்பிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர், அதனை செய்து தர துரிதமாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று சண்முகையா எம்எல்ஏ உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி, வெங்கடாச்சலம், ஒன்றிய பொறியாளர் மேரி,திமுக கிழக்கு கருங்குளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, கலியாவூர் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளத்துரை என்ற சின்னசாமி, கிளைச் செயலாளர்கள் பெருமாள், மாசானமுத்து, பசீர், சண்முகநாதன், தங்கப்பாண்டியன், கலியாவூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஷேக் தாவூத், உலக்குடி பொன் கனி, தொமுச கந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், தகவல் தொழில் நுட்ப அணி மதன்குமார், மற்றும் பல கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டனர்.


