தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்திற்கும் ஆழ்வார்திருநகரிக்கும் இடையே உள்ள தம்பாபிள்ளை தோப்பு என்ற இடத்தில் இன்று மதியம் சுமார் 2 மணி அளவில் 80 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புளியமரம் ஒன்று நடுரோட்டில் சாய்ந்தது. இதனால் திருநெல்வேலி&திருச்செந்தூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவம் அறிந்த ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி போலிசார் போக்குவரத்தை மாற்றுபாதையில் விட்டனர். அதன்பின்னர் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத்துறையினர் வந்து மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


