வல்லநாடு அருகே வாலிபரை வெட்டிய கல்லூரி மாணவரை போலிசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
வல்லநாடு அருகே உள்ள பக்கபட்டியை சேர்ந்தவர் சுப்பையா இவரது மகன் சின்னதம்பி (23). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த துரைமுத்து மகன் வடிவேல் முருகன்(19) என்ற கல்லூரி மாணவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி ஒருவரை ஒருவர் முறைத்து கொள்வார்களாம். அடிக்கடி மோதிக்கொள்வார்களாம். நேற்று தாமிரபரணி ஆற்றில் சின்னத்தம்பி குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்கரையில் இருந்து வந்த வடிவேல் முருகன் சின்னத்தம்பியை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் படுகாயம் அடைந்த சின்னதம்பி பாளை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பி ஓடிய வடிவேல் முருகனை முறப்பநாடு போலிஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.


