014. கரிசல் கதை சொல்லி எங்கள் அண்ணாச்சி பொன்னீலன்
பொன்னீலன் இந்த பெயர் வளரும் எழுத்தாளர்களின் ஆனி வேர். கன்னியாகுமரி மாவட்டம் மணிக்கட்டி பொட்டலில் பிறந்தாலும் தூத்துக்குடி மாவட்ட கரிசல் கதை சொல்லுவதில் வல்லவர் . உயரிய விருதுகள் பல பெற்றாலும், இவரது கதை திரைப்படமாக ஆனாலும், உயரிய பதவியிலிருந்தாலும் பணிவும், துணிவும் பலரும் உதவும் நற்பண்பும் இவருடன் பிறந்தது. இவரது மணி விழாவைத் தம்பி எழுத்தாளர் ராம் தங்கம் சிறப்பாகக் கொண்டாடும் போது , நானும் போய் சந்தித்தேன். ஆசி பெற்றேன். அவரை நானும் என் மகன் காமராஜர் கல்லூரி துணைப் பேராசிரியர் அபிஷ்விக்னேஷ் அவர்களும் சென்று பார்த்த போது அவனுக்குப் பல அறிவுரைகளைக் கூறி, நற்பண்புகளையும் கூறினார்.
ஒரு சமயம் வள்ளியூரில் காவ்யா புத்தக வெளியிட்டு விழாவின் எனது நூலை வெளியிட்டு, சாத்தான்குளம், நட்டாத்தி ஜமீன்தார் வரலாற்றை எழுது என ஆணையிட்டார். அதன் படி நான் தேரிக்காட்டு ஜமீன்தார்கள் என்ற நூலை எழுதி தி தமிழ் திசை இந்து பதிப்பகம் மூலம் வெளியிட்டு நல்ல பெயரைப் பெற்றேன். இதுபோல் பல்வேறு நல்லபெயர்களையும், விருதுகளைப் பெறவும் எனக்கு எப்போதும் ஆசி வழங்குபவர் எங்கள் அண்ணாச்சி. இன்று அண்ணாச்சிக்கு 55வது திருமண நாள். நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி. எங்கள் முன்னேற்றத்துக்கு எப்போதும் உங்கள் ஆசியை வழங்குங்கள். நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


