
ஸ்ரீவைகுண்டத்தில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்க ஆலோசனைக்கூட்டம் சங்கத்தலைவர் பெருமாள் பிரபு தலைமையில் நடந்தது. செயலாளர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர்கள் பிருதிவராஜ், பீஸ்ராஜன், ரகுநாத், ஆறுமுகபெருமாள், கருப்பசாமி, குணசேகரன், கணேசன், தினேஷ் பாலமுருகன், பாலசுப்பிரமணியன், திருப்பாற்கடல் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில், மறைந்த வழக்கறிஞர்களுக்கு வழக்கறிஞர்கள் சேமநலநிதி பெற்று வழங்கப்பட்டது. மறைந்த வழக்கறிஞர்களான ஆனந்தகுமார், பிரான்சிஸ்ஜோசப் ஆகியோருடைய வாரிசுகளுக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழங்கிய ரூ.5.25ம், இந்திய பார்கவுன்சில் சார்பில் வழங்கிய ரூ.50ஆயிரமும் என மொத்தம் ரூ.5.75லட்சத்துக்கான காசோலை ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் மூலமாக பெறப்பட்டு வழங்கப்பட்டது.
கூட்டத்தில், வழக்கறிஞர்கள் செல்வராணி, கலையரசி, தெய்வகண்ணன், சங்கரன், சீனிவாசன், முத்துராமலிங்கம், ரமேஷ், ராமசுப்பு, சுடலைமணி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.