
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணை ஆற்று பகுதியில் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பொங்கலுக்கு மறுநாளான காணும் பொங்கல் அன்று ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தங்கள் குடும்பத்தோடு வந்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடுவது வழக்கமாக இருந்துள்ளது. அதன்பிறகு 15 வருடங்களாக முறையான பராமரிப்பு இல்லாமல் இந்த ஆற்றுப்பகுதி கருவேல மரங்களாகவும் , புதர்களாகவும் காட்சியளித்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் அவர்களின் கடுமையான முயற்சியினால் இந்த தாமிரபரணி ஆற்றுப் பகுதி சீரமைக்கப்பட்டது. இன்று முதல் முதலாக 15 வருடங்களுக்கு பிறகு காணும் பொங்கல் பண்டிகையை சாதி மதம் கடந்து சுற்று வட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினார். குடும்பத்தோடு விளையாடி மகிழ்ந்தனர். சிறுவர்கள் யோகாசனங்களை செய்தும் காற்றாடிகளை மேலே பறக்க விட்டும் மகிழ்ந்தனர். பெண்கள் கபடி கொக்கோ விளையாடி மகிழ்ந்தனர். ஏட்டிலிருந்து உணவுகளைச் சமைத்து கொண்டு வந்து குடும்பத்தோடு ஆற்றுப்பகுதியில் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்