
எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு பாலிசியின் மீதுவழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், பிரிமீயத் தொகையின் மீதும், தாமதக் கட்டணத்தின் மீதும் விதிக்கப்படும் ஜி.எஸ்.டிவரியை நீக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் எல்.ஐ.சி அலுவலகம் முன்பாக எல்.ஐ.சி முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, ஸ்ரீவைகுண்டம் எல்.ஐ.சிமுகவர்கள் சங்கதலைவர் அருள்தலைமை வகித்தார். செயலாளர் கிளைட்டன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ரமாவரவேற்றார். நெல்லை கோட்டத்தலைவர் ஜெயசீலன் சாமுவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.
இதில், துணைத்தலைவர்கள் உதயகுமார், ஆனந்த வள்ளி, இணைச் செயலாளர்கள் ஜான்சிராணி, ராஜா, மண்டல செயற்குழு உறுப்பினர் பாலச்சந்தர் மற்றும் முகவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.